Wednesday, March 27, 2013

"கச்சத்தீவு உடன்படிக்கையை திரும்பப் பெற வேண்டும்" ஜெயலலிதா

கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார். அவ்வுடன்படிக்கை இந்திய அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் செவ்வாய் 26.3.13 கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர் எனக் குறை கூறி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளிக்கையில் அவர் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கும்; துன்புறுத்தப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவிற்கான இலங்கைத் தூதரை அதிகாரியை நேரில் வரவழைத்து, இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பிரச்சினை குறித்து இந்தியா வலுவான நடவடிக்கைகளை ராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டதன் விளைவாய்தான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது, தமிழக மீனவர்களின் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில், கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும், எனவே கச்சத்தீவு குறித்த இந்தியா – இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுத்ததையும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நினைவுகூர்ந்தார்.

மத்திய அரசு தனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லையெனில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெற்றதைப் போல், கச்சத்தீவு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, வலுவான வாதங்களை முன் வைத்து சட்ட ரீதியாக இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Thanks BBC

6 comments :

Anonymous ,  March 27, 2013 at 4:21 PM  

Only Central government has the eligiblity to deal with the foreign affairs of the country.Central government will never wait for any suggestions from the state government.

Anonymous ,  March 27, 2013 at 5:27 PM  

Tamil Nadu has many internal difficulties and problems,why not you try to solve your own problems and difficulties rather handling other country`s matter

Anonymous ,  March 27, 2013 at 6:37 PM  

இதுவரைக்கும் தமிழ் அரசியல் தமிழருக்கு அழிவையும், தோல்வியையும், வெறுப்பையும் பெற்றுத்தந்தது தவிர சாதித்தது ஒன்றுமில்லை. தமிழ் தேசியம் என்று தொடங்கி தமிழனை வெறும் கோவணத்துடன் விட்டு விட்டார்கள்.

இதற்கு அப்பாலும் சுயநலம் மாறவில்லை. அவர்கள் வெட்கம், ரோசமின்றி தமிழ் மக்களின் வோட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

அவர்களும் திருந்தப்போவதில்லை, அவர்களை தொடரும் சில மதி இழந்த மந்தை கூட்டமும் திருந்தப்போவதில்லை.

வன்னியன்

Arya ,  March 28, 2013 at 1:07 AM  

கச்சதீவை உடனடியாக சீனாவிடம் பொறுப்பு கொடுக்க வேண்டும் , அங்கு சீன கடற்படை தளம் அமைத்து தென்னிந்தியாவில் இருந்து வரும் ஊடுருவல்களை தடுக்க வேண்டும் , இதை வலியுறுத்தி பெளத்த பிக்குகள் மகிந்தவின் வீட்டின் முன் உண்ணா விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அத்துடன் தமிழ் நாட்டு தயாரிப்புகளை இலங்கையின் தடை செய்ய வேண்டும் , தமிழ் திரைப் படங்களை தடை செய்ய வேண்டியும் பெளத்த பிக்குகள் மகிந்தவின் வீட்டின் முன் உண்ணா விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

Anonymous ,  March 28, 2013 at 1:05 PM  

Devils and vampires are trying to bring the central government under control.Hope Devils and vampires will run away when the central government wakes up from its long sleep.

Anonymous ,  March 28, 2013 at 1:07 PM  

Madam do not dream, politics is not south indian cinema

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com