எந்த பிரேரணைக்கும் முகங் கொடுக்க தயார்!
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யுத்த குற்றச்சாட்டு தொடர்பான புகைப்படம் மற்றும் ஒளிநாடாக்கள் தமது நிறுவனம் உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்களுக்கு லண்டனை தலைமையகமாக கொண்ட தமிழ் அமைப்புக்களால் வழியாகக்கிடைக்க பெற்றுள்ளதாக பிரித்தானியா ஒளிபரப்பு கூட்டுதாபனம் செய்தி வெளியிட்டிருந்தது.
முன்னதாக மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமானபோது, சனல் 4 தொலைக்காட்சி இவ்வாறானதொரு ஒளிநாடாவை ஒளிபரப்பியிருந்த போது இந்த புகைப்படங்கள் மற்றும் ஒளிநாடாக்கள் முற்றிலும், உண்மைக்கு புறம்பானது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை மற்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை ஆகியவற்றுக்கு முகங் கொடுக்க தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment