ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் மூடப்பட்டது!
2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள பிரேசில் ரியோ டி ஜெனைரோ விளையாட்டரங்கு கூரை உள்ளிட்ட உட்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரியோ டி ஜெனைரோவின் பிரதான கால்பந்தாட்ட விளையாட்டரங்காக காணப்படும் இந்த அரங்கு 6 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அதே நகரிலுள்ள மரகானா மைதானம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விளையாட்டரங்கு மூடப்பட்டமை பிரேசிலுக்கு தந்போது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment