ஐ.நா. பெண்கள் அமைப்பின் தலைவர் பதவி விலகுகிறார்
'ஐக்கிய நாடுகளின் பெண்கள்' அமைப்பின் தலைவராக இருந்தவர் மிசேல் பெசெலெட். ஐக்கிய நாடுகளின் பொது சபையால் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இது பெண்கள் சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டதாகும்.
மிசேல் பெசெலெட் 1951-ம் ஆண்டு பிறந்தவர் ஆவர். சிலி நாட்டின் முன்னாள் அதிபரான இவர் ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இப்போது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்தத் தகவலை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அவரின் ஈடு இணையில்லாத சேவைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்தப் பதவிக்கு அவர் மிகப்பொருத்தமானவர்." என்றார்.
சமீபத்தில் சிலி நாட்டில், அடுத்த அதிபர் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மிசேல் பெசெலெட் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment