இலங்கையர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் இலங்கையிலுள்ள தமிழகத்தவர்களை விரட்டியடிப்போம்!
ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதை தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அரசியல் ஆக்கக் கூடாது. தமிழ் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மீதான வன்முறை அதிகரித்தால் இலங்கையிலுள்ள தமிழ் நாட்டவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இன்று நேற்றல்ல காலங்காலமாக இலங்கை அரசிற்கு இடையூறாகவே இருந்து வருகின்றனர். இலங்கை ஒரு தனிநாடு என்பதை இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் மறந்துவிட்டது போல் திரும்பஞாபகப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மேலும் மேலும் இலங்கை மக்களுக்கு இடையூறு விளைவித்தால் இலங்கையில் உள்ள தமிழ் நாட்டு மக்களை நாட்டிலிருந்து விரட்டி விடுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுல்லாது தமிழ் நாட்டில் உள்ள பிரதான விமான நிலையங்களை இலங்கையர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற பிரசாரத்தை எமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு இல்லையெனக் கூறும் தமிழ்நாடு எமக்குத் தேவையில்லை எனக்குறிப்பிட்டார்.
மேலும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முக்கியமான அறிவுரையொன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினைகளை விளையாட்டில் புகுத்த வேண்டாம். விளையாட்டு என்பது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் பாடமாகும். அதனை சுயலாபத்துக்காக அரசியலாக்க வேண்டாமெனவும்பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
4 comments :
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனிசரையும் கடிக்கும் நிலை வரும்.
பொது பல சேனா மத வெறி பிடித்த தீவிரவாதிகள். இவர்கள் எல்லாம் உண்மையான மதகுருமார்கள் அல்ல. எனவே கடைசியில், இவர்களை வளர்க்கும் மகிந்தா அரசாங்கத்திகே ஆபத்தாக போய் முடியவுள்ளது.
இது விரைவில் நடக்கும். Wait and see.
இலங்கையில் வாழும் தமிழ் நாட்டவர்கள் யார்?. இந்தியக் கடவுச் சீட்டுடன் இலங்கையில் தற்காலிகமாக வதியும் தமி்ழ் நாட்டவர்களா?. அப்படியானால் அவர்களின் வீசாவை ரத்து செய்துவிட்டு அனுப்பிவிடலாமே!. இதற்கு ஏன் வீண் அலட்டல்கள்?.
ச. ஜேசுநேசன்.
Just ignore them and boycott everything an act of boycotting is the best medicine for the epidemic.
முதல் வந்தவங்கள் முதல் போக வேண்டும்.
எனவே இந்திய வம்சா வழித் தமிழருக்கு முதல் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சிங்களவர்கள் முதலில் இந்தியாவிற்கு செல்ல வேண்டும்.
பின்னர் அரேபியாவிலிருந்து வந்த சோனகர் திரும்பிச் செல்ல வேண்டும்.
நாகர்களும் யக்கர்களும் மிஞ்சட்டும்...
Post a Comment