அனைத்து இனங்களையும் மதங்களையும் காக்க கடமைப்பட்டுள்ளாராம் இலங்கக்கோன்.
அனைத்து இனம் மற்றும் சமயங்களை சேர்ந்த மக்களை பாதுகாக்கவும், சமமாக சேவையாற்றவும் பொலிஸார் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் அனைத்து இன மற்றும் மதங்களை சேர்ந்த மக்கள் மத்தியில் நிலவும் நல்லிணக்கத்தையும் சகோதாரத்துவத்தையும் சீர்குலைப்பதற்கு ஒரு சிலர் சூட்சுமமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை அதிகாலம் தொட்டே பல்லின மக்கள், பல சமயத்தவர்கள் வாழும் நாடு ஆகும். இவர்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு தாயக மக்களாக வாழ்ந்து வருகின்றனர். புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இலங்கையின் சுதந்திரம் சீர்குலைந்த போதும், யுத்தம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனாநாயகமும் சமாதானமும் நிலைபெற்றுள்ளது.
அனைத்து மக்களும் தான் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் அரசியல் யாப்பில் உரிமையுள்ளது. ஒரு சிலர் இது போன்ற கருத்துக்களை முன்வைக்கும் போது அதனை இனங்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினையாக சித்திரிப்பதற்கு முயற்சி மேற் கொண்டு வருகின்ற போதும், உண்மையிலேயே அது மோதல்கள் அல்லவென பொலிஸாமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சட்டங்களை அனைத்து மக்களுக்கும் பொதுவாக அமுல்படுத்துவதற்கு பொலிஸார் கடமைபட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
1 comments :
Religious freedom is to be protected.
this can be done by the
police.Mr.Illangakoon must try his best to bring those culprits before justice.A powerful loving religion never needs to go against other religions,because it is so loving the devotees will never change their minds.As such you need to capture the minds of the devotees and not fighting against other religions.
Post a Comment