Saturday, March 2, 2013

புலிகளின் புத்தகங்கள் கிளிநொச்சியில்!

புதுக்குடியிருப்பு - வல்லிப்புரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரித்தானியாவின் நிதியுதவியில் இயங்கும் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் இருந்து புலிகளின் அரசியல் தொடர்பாக எழுதப்பட்ட 229 புத்தகங்களை விசேட அதிரடிப்படையினரின் குழுவொன்று கைப்பற்றியுள்ளது.

கைப்பற்றிய அனைத்து புத்தகங்களிலும் புலிகள் அமைப்பு என அச்சிடப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புலிகளின் நூலகத்தில் இருந்த புத்தகங்களை இந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் வைத்திருந்ததா என்பதை அறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த புத்தகங்களைத் தவிர அலுலகத்திற்கு அருகில் உள்ள மடுவம் ஒன்றில் புலிகளின் 300 இற்கும் மேற்பட்ட பழுதடைந்த புத்தகங்கள் காணப்பட்டதாகவும் அவற்றை பொலிஸார் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளராக பணியாற்றி வருவபவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர் எனவும் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com