வவுனியா தெற்கு கல்வி நிலையத்தில் ஊழல்?
வருடம் தோறும் பாடசாலைகளில் மாதாந்த மற்றும் தவணைப் பரீட்சைகள் நடைபெறுவது இலங்கை கல்வி முறைமை என்பது யாவரும் அறிந்த விடயம். இந்த பரீட்சைகளில் பெரும்பாலானவை வலயக் கல்வி அலுவலகங்களினால் நடாத்தப்படுகின்றது. குறிப்பாக வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தால் பரீட்சைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் பரீட்சை வினாத்தாள்கள் பதிப்பிப்பதற்கு கேள்விகள் கோரப்படுகின்றன. ஆனால் வழங்கப்பட்ட எந்தக் கேள்வி நிரல்களும் பரீட்சிக்கப்படுவதில்லை எனவும், பரீட்சை வள நிலையத்தின் பொறுப்பாளர் கையூட்டுப் பெற்று குறித்த சில அச்சகங்களுக்கு உரிமைகளை விற்பதாக விசனங்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவங்களுக்கு வவுனியா வலயக் கல்வி அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
கேள்விகளை பெற்றுக்கொண்ட அச்சகங்கள் - Vaani Printers, CBA Printers
உதவியவர்கள் - ச.தேவதாஸ் (ஆசிரிய ஆலோசகர் – வணிகப் பிரிவு)
பரீட்சைப் பகுதி பொறுப்பாளர் - சின்னையா
--- சித்தன் ---
0 comments :
Post a Comment