ஆசிரியர்களின் அடாவடித்தனத்தால் விலைபோகின்றது வடக்கின் கல்வி.
வட மாகாணம் இன்று கல்வி நிலையில் பின் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக வவுனியாவில் கல்வி விற்கப்படும் அளவுக்கு சீர்கெட்ட நிலையில் இருப்பது மனவருத்தத்தை தரக்கூடிய ஒரு செயலாகும். இதை அனைவரும் ஆழமாக பார்க்க வேண்டும். வவுனியாவில் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு அதிகரித்திருக்கும் அதே வேளை அதற்கு நிகராக தனியார் கல்வி நிலையங்களும் போட்டியில் இறங்கியுள்ளன. பல தனியார் கல்வி நிலையங்கள் வவுனியாவில் போட்டி போட்டு மாணவர்களின்கல்வி வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதுடன் சில கல்வி நிலையங்கள் தடையாகவும் இருக்கின்றன.
A/L மாணவர்களின் கல்வியை திக்கற்றதாக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் புல்லுருவி ஆசிரியர்கள் சிலர் இருக்கின்றார்கள். பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சிலர் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனியார் கல்வி நிலையங்களுக்கு வரவைப்பதும், அவ்வாறு தங்களிடம் தனியார் கல்வி நிலையங்களுக்கு வகுப்புகளுக்கு வராத மாணவர்களை பாடசாலையில் வைத்து கீழ்மையான வார்த்தைகளால் திட்டுவதும், அவமானப்படுத்துவதும், பரீட்சை வினாத்தாள்களில் புள்ளிகளை வேண்டுமென்றே குறைப்பதும் இயல்பாகி விட்டது. இவ் ஆசிரியர்களுக்கு கல்வித் திணைக்களத்தில் பணி புரியும் உயர் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். காரணம் அவரது கல்வி நிலையத்தில் தான் அதிகப்படியாக இச் சிறுமைத்தனம் நடைபெறுகின்றது. மேலும் மேற் குறிப்பிட்ட ஆசிரியர்கள் A/L Final - 2012 பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களிடம் தாங்கள் இறுதிப் பரீட்சை வினைத்தாளை எடுத்துவிட்டதாகவும், தாம் தரும் வினாக்கள் தான் இறுதிப் பரீட்சைக்கும் வரும் எனவும் பிரச்சாரம் செய்து மாணவர்களை ஏமாற்றி கல்வியை விற்றுள்ளனர்.
குறிப்பாக பிரபல தமிழ் ஆசிரியர் ஒருவர் கடந்த வருடம் 2011 ல் A/L தமிழ் இறுதிப் பரீட்சை வினாத்தாளை பரீட்சைக்கு முன்னர் அப்படியே வெளியிட்டு பொலிஸில் வழக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. இவ் வருடமும் சில வினாக்கள் தனக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களால் வழங்கப்பட்டது என தெரிவித்து மாணவர்களை ஏமாற்றியிருக்கின்றார். கடந்த வருடத்தை போல் இருக்கும் என நம்பி மாணவர்களும் ஏமாறியிருகின்றனர். அது மட்டுமல்லாது 2006 ம் ஆண்டு காலப் பகுதியில் மாணவர் சிலருடன் இவர் றோட்டில் சண்டையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இதே போன்று ஆசிரிய பண்புகளுக்கு அப்பாற்பட்டு பல சட்ட விரோத செயல்களை இவர் செய்து வருவது எமக்கு மனவருத்தத்தை தருகின்றது.
மேற்கண்ட ஆசிரியரின் நண்பன் ஒருவர் 2012 இவ் வருடம் A/L Final Paper அரசறிவியல் பாடத்தில் கட்டாயம் வரும் என சில வினாக்களை இவர் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளார். அவ் வினாக்கள் தனக்கு ஒரு பேராசிரியரால் வழங்கப்பட்டதாகவும் மாணவர்களுக்கு கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ரூபாய் 700.00 ஐ பெற்றிருக்கின்றார்கள். இவரும் 2006 ம் ஆண்டு காலப் பகுதியில் மாணவர்களுடன் நடு வீதியில் கைகலப்பில் ஈடுபட்டு பல பிரச்சனைகளுக்கு ஆளானார்.
மேலும் வவுனியா நகர சபை உப தலைவர் அவர்கள் மாணவர்கள் ஒன்று கூடும் இடங்களிலும், கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் இடங்களிலும் அரசியல் பற்றி மாணவர்கள் மத்தியில் தவறான எண்ணக் கருவை உருவாக்கி வருகின்றார்.
அது மட்டுமல்லாமல் அவரது முதன்மைக் குருவாகிய திரு.சிறீஸ் final 2012 exam க்குரிய வினாக்களைத் தந்ததாகவும், ஆகவே தனது கருத்தரங்குகளுக்கு வருகை தருமாறும் கூறியிருக்கின்றார். இது மாணவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதாகும்.
ஆகவே வவுனியா மாவட்டத்தின் கல்வி நிலையினை காக்கும் பொறுப்பு மாணவர்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. இத்தகைய வழிகாட்டிகள் இருக்கும் வரை தமிழ் சமூகம் திருந்தப்போவதில்லை.
0 comments :
Post a Comment