செயற்கைக்கோளுக்காக கை கோர்க்கும் இஸ்ரோவும் நாசாவும்!
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டங்களில் இணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.
4ஆவது அமெரிக்க - இந்திய விண்வெளி கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றபோது. இஸ்ரோ மற்றும் நாசா இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரோ மற்றும் நாசா ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கடந்த 2008ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது இந்தத் திட்டத்திற்குத் தேவையான 2 கருவிகளை நாசா வழங்கியது எனக்குறிப்பிட்டதுடன் தொடர்ந்தும் இணைந்து செயல்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment