பொலிஸ் வாகனத்தில் கைவிலங்கிட்ட இழுத்துச் செல்லப்பட்டவர் பலி!
தவறான இடத்தில் டாக்சியை நிறுத்தினார் என்பதற்காக கையில் விலங்கிட்டு பொலிஸ் வண்டியில் இழுத்துச் செல்லப்பட்ட சாரதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்சம்பவம் தென்னாப்பிரிக்காவின், டேவிடோன் நகரில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 27 வயதுடைய மிடா மாசியா, என்பவராவார்.
சாலையில், தவறான இடத்தில் டாக்சியை நிறுத்தியதாக, போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனால், மிடா மாசியா போலீசாரிடம் தகராறு செய்தார். இதையடுத்து, அவரை கைவிலங்கிட்டு, போலீஸ் வேனின் பின்புறம் கட்டி, போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். போலீஸ் நிலைய வாசலில், வேன் நின்ற பிறகு, டிரைவர் மாசியா, இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் நம்ம நாட்டில் இடம்பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?
0 comments :
Post a Comment