Sunday, March 17, 2013

ஜெனிவாவில் 99 சிபார்சுகளை இலங்கை தட்டிக்கழித்ததையிட்டு அமெரிக்காவுக்கு கவலையாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் 204 இல் 99 பிரேரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதையிட்டு அமெரிக்க தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரேரணைகளுள் மரண தண்டனையை இல்லாதொழித்தல், சர்வதேச நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல், அரச இரகசியங்களை வெளியிடும் சட்டத்திற்கு இணங்குதல், ஐநாவின் விசேட குழுவினர் இலங்கைக்கு வருவதற்கு அனுமதித்தல் போன்றன உள்ளடங்கப்பட்டுள்ளன.

ஜெனீவாவுக்குச் சென்றுள்ள இலங்கைக் குழுவினர் ஏனைய நாட்டு தூதுக்குழுவினரிடம் இந்தப் பிரேரணைகள் விடயத்தில் எதிரான கருத்துக்கள் கூறியதற்காகவும் தூதுவரின் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அவர் அங்கு குறிப்பிட்டுள்ளதாவது, முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் 204 ஐயும் இலங்கை செயற்படுத்த வேண்டும் என்பதாகும்.

ஆயினும் இலங்கை இந்தப் பிரேரணைகளில் அதிகமானவற்றை இலங்கை நிராகரிப்பதற்குக் காரணம் அவை அரச பாதுகாப்பு தொடர்பானவை என்பதனாலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com