இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் மீது 8 பேர் இணைந்து பாலியல் பலாத்காரம்.
சுவிட்சர்லாந்திலிருந்து தனது கணவனுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பெண் கணவன் முன்னே பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
8 பேர் கொண்ட கும்பல், சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன் அவரது கணவரையும் தாறுமாறாகதாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 20 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச காவல்துறைத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட சுவிட்சர்லாந்து தூதரகம் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதேநேரம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்ட சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் வான் காஸ்டல்மர் ஆறுதல் கூறியுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து மேலதிக உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட சுவிஸ் பெண் இந்திய பொலிஸாரினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி
2 comments :
This may reflect the "devil`s character" of the country men.Why the country is packed with more sex addicts...?
இந்தியாவுக்கு சுற்றுலா செல்லாதீர்கள் பெண்களே என்று உலக நாடுகள் அனைத்தும் அறிவிக்கும் நாள் தூரம் இல்லை .
Post a Comment