Saturday, March 2, 2013

சட்டவிரோத மின் மூலம் மின்சாரசபைக்கு 70 இலட்சம் வருமானம்!

ஜனவரி மாதத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற 224 பேரை இலங்கை மின்சார சபையின் திடீர் சுற்றிவளைப்புக்களின் மூலம் சட்டத்தின்முன் கொண்டு வந்ததன் ஊடாக மின்சார சபைக்கு ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இவற்றில் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களின் ஊடாக நீதிமன்றத் தண்டப் பணமாக 25 இலட்சம் ரூபாவும், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டப் பணமான 144 இலட்சம் ரூபா சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களிலிருந்தும் அறவிடப்பட்டுள்ளது.

இவர்கள் மின்மானியை மாற்றியமைத்தல், மின்கம்பிகளிலிருந்து சட்டவிரோதமாக மின்பெறுதல் உள்ளிட்ட 224 சம்பவங்கள் இச்சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மின்சாரசபை அறிவித்துள்ளதுடன் இவற்றில் 159 சம்பவங்கள் மின்மாற்றியை மாற்றியமைத்த சம்பவங்களாக பாணப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கை மின்சாரசபை மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் 3,569 சம்பவங்கள் கண்டறியப்பட்டன. இவற்றின் ஊடாக சுமார் 21 கோடியே 20 இலட்சத்து 34 ஆயிரத்து 545 ரூபா வருமானமாக கிடைத்திருப்பதாகவும் மின்சாரசபை தெரிவித்ததுடன் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெறுவதன் ஊடாக இலங்கை மின் சாரசபைக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்கள் பற்றி தகவல்களைத் தந்துதவுமாறு பொதுமக்களின் உதவியையும் மின்சாரசபை கோரியுள்ளது.

சட்டவிரோதமாக மின்சாரம் பெறுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் இலங்கை மின்சார சபையின் விசாரணைப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 0112422259 உடன் தொடர்பு கொண்டு அறிவித்தால் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டப் பணம் அறவிடப்படுவதுடன் அவர்களுடைய மின்சார இணைப்பும் துண்டிக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com