20 டாக்டர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்த அதிசயம்!
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் செல்டெனம் மருத்துவமனையில் சுமார் 7 கிலோ கிராம் எடையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதுடன் அந்தக்குழந்தைக்கு ஜார்ஜ் கிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக்குழந்தை பிறக்கும் போது குழந்தையின் எடை 15 பவுண்டுக்கும் அதிகமாகும். (அதாவது 7 கிலோ எடை). இதனால் பிரசவத்தின் போது குழந்தையின் தாய் பெரும் சிரமத்துக்கு ஆளானார். எனவே அவருக்கு சுமார் 20 டாக்டர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்தனர்.
குழந்தை பிறந்த போது அவன் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் வெறும் 10 சதவீதம் மட்டுமே காணப்பட்டபோதும் தற்போது ஜார்ஜ் ஆரோக்கியமாக உள்ளதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment