பகிரங்க விவாத்திற்கு சனல் - 4 தயாரா?
சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அழைத்துள்ளார். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் எனவும் அவர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமை பேரவையில் முன்வைத்துள்ள குற்றச் சாட்டுக்கு தாம் உரிய பதிலை வழங்கப்போவதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தப் பொய்யான குற்றச்சாட்டை இராணுவத்தின் மீது சுமத்த ஏன் நான்கு வருடங்கள் தாமதமானது என தான் கேள்வி எழுப்பப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம், பாலச்சந்திரன் சம்பந்தமான புகைப்படங்கள் அடங்கிய நோ பையர் சூன் திரைப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை உருவாக்கிய சனல் - 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரேவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தான் சவால் விடுப்பதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த வீடியோ திரைப்படம் மனித உரிமை பேரவையின் மண்டபம் ஒன்றில் திரையிடப்படவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்துமாறு இலங்கை அரசு மனித உரிமை பேரவையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment