தேசத்தின் மகுடம் கண்காட்சியில் 39 மில்லியன் ரூபா ஊழல்!
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி – 2013ஆம் ஆண்டுக்கான செயலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி 39 மில்லியன் ரூபாவை அபகரித்துள்ளார் என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர, குற்றப்புலனாய்வு பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப்புலனாய்வினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அம்பாறையில் நடைபெறுகின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் பல செயற்திட்டங்களை செயற்படுத்தும்போது, அதன் 2013ஆம் ஆண்டுக்கான பிரதான அதிகாரியாக செயற்பட்ட அமைச்சின் மேலதிக செயலாளர் காந்தி குணவர்த்தன 39 மில்லியன் ரூபா ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் பதிவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர தெரிவித்தார்.
இதிலும் பெருமளவு மோசடிச்சம்பவங்கள் தற்காலிக மலசலகூடங்கள் அமைத்தல், வாசிகசாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை அமைத்தலிலும் பூ அலங்காரத்திலும் இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment