அருங்காட்சியக படிக்கட்டு உடைந்து வீழ்ந்ததில் 35 பேர் படுகாயம்!
கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தின் படிக்கட்டு நேற்று(28.03.2013) மாலை 4.20 மணிக்கு உடைந்து வீழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 35 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 35 பேரில் ஆசிரியர்கள் சிலரும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்து
0 comments :
Post a Comment