கருணா தலைமையில் கொல்லப்பட்ட 32 பிக்குகளின் நினைவாக தூபி அமைகின்றது. திறந்து வைக்கிறார் மஹிந்தர்.
புலிகள் அமைப்பின் மட்டு-அம்பாறை இராணுவத் தளபதியாக இருந்தவர் தற்போதைய பிரதி அமைச்சரான கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன். அவர் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலைகளில் அரந்தலாவை பிக்குகள் படுகொலையும் அடங்குகின்றது.
26 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1987 ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை அரந்தலாவ பிரதேசத்தில் 32 பிக்குகள் பயணம் செய்த பஸ் வண்டியொன்று புலிகளால் கடத்தப்பட்டது. குறித்த பஸ் வண்டிகளை காட்டு பகுதியொன்றுக்கு கொண்டு சென்ற புலிகள் அதில் பயணம் செய்த சங்கைக்குரிய ஹெகொட இந்தசார தேரர் உட்பட 32 பிக்குகளும் 4 பொது மக்களும் கொடூரமாக கொலை செய்தனர்.
புலிகளால் நடத்தப்பட்ட இக்கொலைகளை நினைவுகூரும் வகையில் அன்று பிக்குகள் கொலை செய்யப்பட்ட இடத்தில் பஸ் வண்டியொன்று நிறுத்தப்பட்டு, 32 பிக்குகளின் மரணத்தை சித்திரிக்கும் வகையில் இத்தூபி நிர்மாணிக்கபபட்டுள்ளது.
பிரபல சிற்பி அனில் அருமபுற தலைமையில் இந்நினைவு தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இங்கு விஜயம் செய்து நிர்மாண பணிகளை பார்வையிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்நினைவு தூபி தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது திறந்து வைக்கப்படவுள்ளது.
இத்தூபியினை திறந்து வைக்கும்போது தனது கட்சியின் பிரதித் தலைவரான விநாயமூர்த்தி முரளிதரனையும் மஹிந்தர் அழைந்துச் செல்வாரா?
0 comments :
Post a Comment