1947 - 2002 ஈழம் நோக்கிய காலப்பார்வை ......
இலங்கையில் இன்றைய அரசியல் நிலை சூடு பிடித்து காணப்படுகின்றது. சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் கதைத்துவிடக்கூடிய விடயம் அரசியல். ஆனால் இலங்கை நோக்கிய காலப்பார்வையில் எல்லோரும் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதுதான் உண்மை. இலங்கை அரசையோ, தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது ஏனைய ஆயுதக் குழுக்களையோ அரசியல் ரீதியாக ஆராயும் போது காலப் பார்வை என்பது முக்கியம் பெறுகின்றது. அந்த வகையில் 1947 ம் ஆண்டில் இருந்து 2002 வரையுள்ள காலப்பகுதிக்குள் நிகழ்ந்தவற்றை தினமும் தொகுத்துரைக்க இந்தச் சித்தன் எண்ணுகின்றேன்.
1947 - சோல்பரி அரசியல் யாப்பு அமுல். இதுவே நாடாளுமன்ற நடைமுறையை இலங்கைக்கு கொண்டு வந்தது.
நாடாளுமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தல்.
தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வெற்றி பெற்று டி.எஸ்.சேனநாயக்காவை பிரதமராகக் கொண்ட மந்திரி சபை அமைக்கப்பட்டது.
சுதந்திரன் பத்திரிகை தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது (04.02.1948)
மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது (15.11.1948)
1949 - ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் சேர்ந்துகொண்டார்.
தந்தை செல்வாவினால் சமஷ்டி கட்சி (F.P) ஆரம்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
1950 - இலங்கை - இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என வத்தளையில் நடந்த பத்தாவது அமர்வில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கல்லோயாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்.
1951 - ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து S.W.R.D.பண்டதரநாயக்கா விலகல்.
பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தல்.
(மீதமும் வரும்)
சித்தன்
0 comments :
Post a Comment