1,900,000 ரூபாவிற்கு மேலான பணத்துடன் தலைமறைவான இவரை கண்டால் உடனே பொலிசாருக்கு அறிவியுங்கள்
படத்தில் காணப்படும் பிரஸ்தாப நபர் வெளிநாட்டில் உயர் சம்பளத்துடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தருவதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்களிடம் பெருந் தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
தற்போது நீர்கொழும்பில் வசிக்கும் சிவநாதன் அன்ரன் சியாம் குமார் எனும் குறித்த நபரே இவ்வாறு ஆறு இளைஞர்களிடமும் பெருந்தொகையான பணத்தை மோசடி செய்து தற்போது தலைமறைவாகியுள்ளார்.
எனவே இந்தநபர் தொடர்பான தகவல்களை அறிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தும் அதேவேளை, எதிர்காலங்களில் இவ்வாறான ஏமாற்றுக்காரர்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தற்போதுள்ள அமைதிச்சூழலை பயன்படுத்தி வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக கூறி இளைஞர், யுவதிகளை ஏமாற்றும் நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் இளைஞர்கள், யுவதிகளிடமிருந்து பெருந்தொகையான பணத்துடன் மோசடிக்காரர்கள் தலைமறைவாகும் சூழ்நிலையிலும் காசோலை மோசடிகள் தொடர்பிலும் மக்கள் விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment