Saturday, March 30, 2013

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய 11 நாடுகளின் விபரங்களை வெளியிடுவேன். மிரட்டுகின்றார் கேபி.

இலங்கை மீது போர்குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது மேற்குலகம். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும் மேற்குலகிற்கும் அண்ணன் தம்பி உறவு என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. இறுதி வரைக்கும் இலங்கைக்கு வலது கையாலும் புலிகளுக்கு இடது கையாலும் போராயுதங்களையும் அதற்கான அலோசனைகளையும் மேற்குலக வழங்கி கொண்டு வந்திருக்கின்றது என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இவ்விடயத்தினை கடந்த வாரம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் தெரிவித்திருந்தார். எந்த நாடுகள் புலிகளுக்கு உதவின என்றும் எவ்வாறு எந்த நோக்கத்திற்காக வழங்கின என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் புலிளியக்கத்தின் ஆயுதக்கடத்தன் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் „புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன்' என்று கூறியுள்ளார்.

5 comments :

karan ,  March 30, 2013 at 8:13 PM  

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொன்னவங்கள் இவங்கள்தான் என்றது இன்னும் யாருக்காவது ஞாபகம் இருக்கோ?

Anonymous ,  March 30, 2013 at 9:02 PM  

கரன் அண்ணே ரத்த தாகம், பணத்தாகம், பதவித்தாகம் எண்டத மாறி விளங்கீட்டீங்கள்

Anonymous ,  March 31, 2013 at 3:46 AM  

எங்கட மேதகுதலைவர் பிரவாகரன் தப்பியிருந்திருந்தால் கூட, இப்படி தான் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்திருப்பார். தமிழீழம் என்று தொடங்கியதே சுயநல நோக்கமும், கள்ள நோக்கமும் கொண்ட கயவர்களினால் என்றால், தமிழீழத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் எப்படியானவர்களாக இருப்பார்கள்?

நம்புங்கள் நாளை பிறக்கும் -----

sutha ,  March 31, 2013 at 10:10 AM  

Enna pirakkum kaluthaikkum kuthiraikkum sernthu koverukaluthai ya

Anonymous ,  March 31, 2013 at 11:49 AM  

He too a living long standing witness
Their witness vital important in the Int courts.We need to know how the foreign interference has made the
made the country into a worse situation.Because we are the people undergoing much hardship,it will take a longtime to get rid of this bloody situation.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com