அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஈரான்-பாகிஸ்தான் எரிவாயு பைப்லைன் திட்டம் 11-ம் தேதி தொடக்கம்
கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான்-ஈரான் நாடுகள் எரிவாயு பைப்லைன் பதிக்கும் பணியை மார்ச் 11-ம்தேதி தொடங்க உள்ளது. எல்லையில் காப்த் ஜீரோ பாயிண்டில் நடைபெறும் தொடக்க விழாவில் இரு நாட்டு அதிபர்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்த விழாவின் முடிவில், எல்லையில் உள்ள காப்த் மற்றும் பாஸ்னி ஆகிய இடங்கள் வழியாக பைப்லைன் அமைப்பதற்கும், குவாதார் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதன்பின்னர் காப்த் பகுதியில் இருந்து பாகிஸ்தான் பிரிவு பைப்லைன் அமைக்கும் பணி தொடங்கும் என்று அந்நாட்டிற்கான தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்று பைப்லைன் ஒப்பந்தத்தை இறுதி செய்ததுடன், நிதி மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள் பற்றி ஆலோசனை நடத்திவிட்டு நேற்று நாடு திரும்பினார். இதனையடுத்து பைப் லைன் திட்டம் விறுவிறுப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
0 comments :
Post a Comment