ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் நிறைவு. 116 000 ஈராக்கியர்கள் பலி. ஆய்வில் தகவல்.
கடந்த 2002-ம் ஆண்டில் ஈராக் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குற்றம்சாட்டின.
மேலும் அங்கு அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டன. இதை ஈராக்கின் அப்போதைய அதிபர் சதாம்உசேன் திட்டவட்டமாக மறுத்தார்.
எனவே, அவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய ஒரு குழுவை ஈராக்குக்கு ஐ.நா. அனுப்பியது. சோதனையில் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் கடந்த 2003-ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அமெரிக்க வீரர்கள் அங்கு களம் இறக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து பதுங்கு குழியில் ஒளிந்திருந்த ஈராக் அதிபர் சதாம்உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
அதன்பிறகும் போர் ஓயவில்லை. சதாம் உசேன் ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகினர்.
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் புதிய அதிபராக பதவியேற்ற ஒபாமா கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றார். இதையடுத்து 7 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்தது.
அதில் ஈராக் மக்கள் 1.20 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தாலும் அவர்களில் 4 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் அடங்குவர். மேற்கண்ட விவரங்கள் அமெரிக்க பேராசிரியர்கள் பெர்ரிலெவி மற்றும் விக்டர் சிடெல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவால் ரூ.933 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா போர் தொடுத்த 10-வது ஆண்டு நிறைவு தினம் ஈராக்கில் கடைபிடிக்கப்பட்டது. போரின்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி ஷியா பிரிவினர் நேற்று பாக்தாத்தில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்..
0 comments :
Post a Comment