Scanner மற்றும் குரல் பதிவினைக் கொண்ட Ballpoint பேனை
Hammacher Schlemmer ஆனது பல சுவாரஷ்யமான தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒரு Ballpoint பேனையை அறிமுகப்படுத்தியுள்ளது. Pen Sized Scanner என அழைக்கப்படும் இந்த பேனை மூலம் ஆவணங்களை 2048 x 1536 pixel அளவில் மிகவும் தெளிவாக படமெடுக்க முடிகின்றது இதற்காக இதனுள் 5MP திறனுடைய Camera பொருத்தப்பட்டுள்ளதுடன் 1 GB உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது.
இதன் மூலம் ஆவணங்களை படமெடுக்கும் போது நீள்சதுர வடிவில் சிவப்புநிற ஒளிக்கற்றை தோன்றுகின்றது. இதன்மூலம் நாம் Scan செய்ய வேண்டிய இடத்தினை துல்லியமாக அடையாளப்படித்திக்கொள்ள முடிவதுடன் இதனை ஒருதடவை Charge செய்வதன் மூலம் 300 க்கும் மேற்பட்ட படங்களை எடுக்க முடிகின்றது. இதனுள் குரல் பதிவுகளையும் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment