சுவிஸில் தமிழரின் காட்டாட்சி.
உலகிலே ஜனநாயகத்திற்கு பெயர்போன நாடு எனச் சொல்லப்படுகின்ற சுவிட்சர்லாந்தில் தமிழரின் காட்டாட்சி எல்லை கடந்து செல்கின்றது. மக்களின் உழைப்பபை சுரண்டும் போக்கிரிகளுக்கு சட்டம் , நீதி , ஒழுங்கு முறைகள் சுத்த சூனியமாகவே தெரிகின்றது. உடம்பை வருத்தி உழைக்க முடியாத ஜென்மங்கள் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கு போலி விளம்பரங்களை செய்கின்றது.
சமூதாயத்தின்மீது எவ்வித அக்கறையுமற்ற இணையத்தளம் ஒன்று இந்த கையாலாகமோசடிக்;காக விளம்பரங்களை செய்கின்றது. விளம்பரத்திற்கான பணம் வந்தால் மாத்திரம்போதும், மக்களென்ன மண்ணாங்கட்டிகள் என்பதே குறித்த இணையத்தின் குறிக்கோள்.
நேற்றும் முன்னாளும் லங்காசிறியில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. அவ்விளம்பரத்தில் சுவிட்சர்லாந்து திரையரங்குகளில் விஸ்வரூபம், சிறுவர்களுக்கு 8 சுவிஸ் பிராங்குள், பெரியவர்களுக்கு 14 சுவிஸ் பிராங்கு என்பது அந்த விளம்பரம். விளம்பரத்தை பார்த்துச் சென்றவர்களிடம் அறவிடப்பட்ட பணம் 25 சுவிஸ் பிராங்குகள். சிறுவருக்கும் 25 பிராங்குகள் பெரியோருக்கும் அதேவிலை.
உங்கள் விளம்பரத்தில் 8 , 14 சொல்லப்பட்டிருக்கின்றதே என்று கேட்டவர்கள் செந்தமிழில் வாங்கி கட்டியுள்ளனர்.
காட்டுமிராண்டிகளால் மாத்திரம் ரசிக்கக்கூடியதான இத்திரைப்படம் சிறுவர்கள் பார்ப்பதற்கு எந்தவகையிலும் உதந்தது அல்ல. முற்று முழுதாக இரத்தம் தோய்ந்த காட்சிகளும் , மனிதர்களின் கழுத்துகளை வெட்டியும் சுட்டும் கொல்லும் கொடுரக்காட்சிகளை கொண்ட இப்படத்திற்கு சிறுவர்களுக்கு குறைந்தவிலை வாருங்கள் என அழைக்கப்படுகின்றது.
இத்தனை அநியாயங்கள் நடக்கின்றபோதும், சுவிட்சர்லாந்திலே தமிழர் நலன்சார்ந்து இவ்விடயங்களை தட்டிக்கேட்பதற்கோ அன்றில் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கோ எவரும் முயற்சிக்காதது கவலைக்குரியது.
1 comments :
நகைகள் வாங்குதல், சீட்டு, ஒரு வேலை போதாதென்று இன்னொரு கள்ள வேலை, பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்று அவசர அவசரமாக சாபிட்டுவிட்டு அரைமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று மொய் கொடுத்தவுடன் கீழே வந்து தனது பிள்ளையின் பிறந்ததின அழைப்பிதழ்களை அங்குள்ளவர்களுக்கு அளித்துவிட்டு அவசர அவசரமாக அடுத்த கொண்டாடத்துக்கு படை எடுக்கும் சுவிஸ் தமிழனுக்கு இதை எல்லாம் கணக்குப் பார்க்க அல்லது சிந்திக்க எங்கே நேரம். இவர்கள் மக்களா இல்லை மா(டு)க்களா ?
Post a Comment