தேயிலை செடிக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு – அடையாளங் காண முடியவில்லையாம் !
நுவரெலியா, சமரகிரி பகுதியிலுள்ள தேயிலைச் செடி பற்றைக்குள்ளிருந்து அடையானங்காண முடியாத நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறிதத் சடலம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இச்சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லையென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் வவுனியாவிலுள்ள சாளம்பைக்குளம் வயல் வெளிப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் ஒன்றை வவுனியாப் பொலிஸார் மீட்டுள்ளனர். இதில் வவுனியா, செல்வாநகர் செக்கடிப்புலவு பகுதியைச் சேர்ந்த வடிவேல் செல்வகுமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
1 comments :
This kind of sorrowful incidents prove that there is no security for the citizens of the country.
Post a Comment