யாழ். பல்கலையில் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!
1987ஆம் ஆண்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு (23.02.2013) காலை பலாலி இராணுவ முகாமிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவு தூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஒப்ரேசன் பவன் நடவடிக்கையை மேற்கொண்டு இந்திய இராணுவத்தினர் வானில் இருந்து பரசூட் மூலம் யாழ். பல்கலை கழக மருத்துவ பீட மைதானத்தில் தரை இறங்க முற்பட்டவேளை மருத்துவ பீட வளாகத்தினுள் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 32 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் நினைவாக பலாலி இராணுவ முகாமினுள் அமைக்கப்பட்ட நினைவுத் தூபில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா,திருமதி அசோக் கே காந்தா, யாழ் இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம், யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேயர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, ஆகியோர் உயிர் இழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா இலங்கை உயிர் இழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூர்ந்ததையிட்டு நான் மகிழ்சி அடைகிறேன். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான அன்னியோன்யம் மேலும் வளரும் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment