Friday, February 22, 2013

நீரிழிவாளர்கள் காலில் புண்கள் ஏற்படால் என்ன? செய்யலாம்.!

காலில் புண்கள் ஏற்படுவது மற்ற எவர்களையும் விட நீரிழிவாளர்களுகு மிகவும் ஆபத்தானது. நீரிழிவினால் காலுக்கானகுருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில் புண்கள் ஏற்படுகி்ன்றன. அதே இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகிறது.

மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிவாளர்களுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
உணர்வு குறைவு என்பதால் அவை பெருகும்வரை தெரிவதும் இல்லை. அதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை The American Podiatric Medical Association வழங்கியிருக்கிறது.

உங்கள் மருத்துவரை ஒழுங்கான காலக்கிரமத்தில் சந்தியுங்கள்.புகைப்பதையும், மது அருந்துவதையும் தவிருங்கள்
குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சீனியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள்.

உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளையும் சொக்ஸ்களையும் அணியுங்கள். தினமும் உங்கள் பாதங்களை ஒழங்காக அவதானியுங்கள். உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போன்ற எதையும் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com