பிரதித் தலைவர் பதவிக்கு நால்வர், ஐதேக உட்பூசல் மேலும் நீள்கிறது...!
ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவராக நால்வரை முன்மொழிந்துள்ளதால் ஐதேகவுக்குள் உட்பூசல் மேலும் வலுவுற்றுள்ளது.
பிரதித் தலைவர் பதவியை ரவி கருணாநாயக்காவுக்கு வழங்கியதை அவர் நிராகரித்ததனாலேயே இந்த உட்பூசல் மேலெழுந்துள்ளது. பிரதித் தலைவர் பதவியை நிராகரித்து ரவி கருணாநாயக்கா, 1994 ஆம் ஆண்டு தான் அன்றைய சந்திரிக்கா ஆட்சியிலிருந்து விலகி, பாராளுமன்றத்திற்கு வந்து தோற்கும் கட்சியாகிய ஐகாவுடன் இணைந்து பெரும் பங்களிப்புச் செய்த்தாகவும், கட்சியுடன் இணைந்துகொண்ட நாட்கொண்டு இன்றுவரை தன்னாலான முழுப் பங்களிப்பையும் ஐதேக வுக்கு வழங்கிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், தனக்கு பகுதி பகுதியாகப் பிரித்துக் கூறுபோடப்பட்ட பிரதித் தலைவர் பதவி தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த உட்பூசல் ரவி கருணாநாயக்கா எதிர்காலத்தில் அரசியலில் புதுத் தீர்மானம் எடுக்க வழிசமைத்துள்ளது என்பதையும் தெளிவுறுத்துகிறது.
தற்போதைக்கு தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள சஜித் பிரேமதாச எதிர்காலத்தில் வேறு முறையில் வெற்றிபெறுவதற்கு முயன்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம் மற்றும் லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் தாம் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று இதுவரை தெளிவாக அறியக் கொடுக்காதிருக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment