போலி கச்சேரியை சுற்றிவளைத்தனர் பொலிஸார்!
பிறப்பு இறப்புச் சான்றிதழ் மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் உட்பட பல்வேறு சான்றிதழ்கள் திருட்டுத்தனமாக தயார்செய்து விநியோகிக்கும் ஒருவர் குருணாகலை மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான பிரியசாந்த ஜயகொடி தெரிவிக்கிறார்.
இந்தச் சந்தேக நபரிடமிருந்து வெவ்வேறு பதவிகள் வகிக்கும் அரச உத்தியோகத்தர்களின் இறப்பர் முத்திரைகள் பலவும், போலியாகத் தயார்செய்யப்பட்ட சான்றிதழ்கள் பலவும், அரச ஆவணங்கள் பிரதி எடுக்கும் இயந்திரம் ஒன்றும்கைப்பற்றப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment