திருமணத்திற்கு பணம் தேட வெளிநாடு போய் கையிழந்த இந்திக்கா
திருமணத்திற்கு பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் அங்கவீனமான நிலையில் நாடு திரும்பியுள்ளார். பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இந்திகா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஊடாக வெளிநாடு சென்ற இந்திகா இம்மாதம் 6ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
குறித்த தனியார் நிறுவனம் டுபாய்க்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து தம்மை ஈராக்கிற்கு அனுப்பியதாகவும் ஈராக்கில் தமக்கு பாரிய கொடுமைகள் இழைக்கப்பட்டதாகவும், தீயினால் சுடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமது ஒரு கை செயலிழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் வினவியபோது அது தொடர்பில் ஆராய்வதாக அதன் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment