இத்தாலிக்கான இலங்கைத் தூதுவரை திருப்பியழைத்தது இலங்கை வெளியுறவு அமைச்சு.!
இத்தாலிக்கான இலங்கை தூதுவர்,அசித்த பெரேரா இலங்கைக்கு உடனடியாக திருப்பியழைக்கப் பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. ஐரோப்பியாவில் அதிகரித்தள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்று தெரிவித்தே இவர் நாட்டிற்கு மீண்டும் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
அண்மையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இத்தாலிக்கு சென்றிருந்த போது அசித்த பெரேரா மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை அசித்த பெரேராவை, நாட்டுக்கு திருப்பியழைக்குமாறு, ரோமின் தம்மாலோக்க விகாரையின் விகாராதிபதி தம்பதெனிய தம்மாராம தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இத்தாலிக்கான இலங்கை தூதுவர், அசித்த பெரேராவின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment