ஹலால் பற்றி என்ன சொல்வார் ஜனாதிபதி மகிந்தர்?
ஹலால் பிரச்சினை சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர், அடுத்த வாரம் ஹலால் பிரச்சினை சம்பந்தமாக அறிக்கையொன்றை விடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்பதற்கு தயார்நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அமைச்சரவைக் குழுவினரின் அறிக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளதென்றாலும், அதற்குரிய தீர்க்கமான முடிவாக ஜனாதிபதியின் அறிக்கை இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹலால் தொடர்பான அறிக்கை சென்ற வியாழக்கிழமை வெளியிடப்பட இருந்தாலும் அதனை இம்மாதத்திற்குள் வெளியிடுவதற்கே தீர்மானித்துள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment