புலம்பெயர்ந்துள்ள புலிகளே எமது அரச இணையத் தளங்களைத் ஹாக் செய்கின்றனர்- இலங்கை அரசாங்கம்
கணினி முறைப் பயங்கரவாத நடவடிக்கைகளை வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் இணையத் தளங்கள் மீது மேற்கொள்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டியுள்ளது. ஊடக மற்றும் தகவல்கள் அமைச்சின் இணையத்தளங்கள உள்பட பல்வேறு தளங்கள் தாக்குதலுக்குள்ளான நிலையிலேயே இக்குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இத்தாக்குதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஊடக அமைச்சின் செயலாளர் ஷரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளிலுள்ள புலிகள் பல முனைகளில் தொழிற்படுகின்றனர். அவற்றில் ஒன்று தான் இலங்கை அரசாங்கத்தின் இணைத்தளங்கள் மீதான தாக்குதல்.
ஊடக அமைச்சின் இணையத்தளமான media.gov.lk தாக்கப்பட்டு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சில கொடூரங்களை காட்டும் ஒரு இணைப்பை ஏற்றியிருந்தது.
அதில் அப்பாவி தமிழர்களை கொல்வதை நிறுத்துங்கள் அல்லது எமது தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்ற செய்தியும் காணப்பட்டது. என்றார்.
0 comments :
Post a Comment