இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட சி. சிவகுமாரை நலம் விசாரிக்கச் சென்றார் சரவணாபவன் எம்.பி.
இன்று அதிகாலை புத்தூர்ப் பகுதியில் வைத்து தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பத்திரிகை விற்பனைப் பணியாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன்.
யாழ். பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த சி. சிவகுமார் என்பவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் கொண்டு சென்ற பத்திரிகைகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விநியோகப் பணியாளரை இன்று காலை நேரில் சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், விநியோகப் பணியாளரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளாகியுள்ள சி. சிவகுமார், தனது உடலில் ஏற்பட்ட காயங்களைக் காண்பித்துள்ளதோடு, தான் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு காயமடைந்தமையினால் தமது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு குறித்தும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தியுள்ளார். (கேஎப்)
1 comments :
It is unfair to hit an innocent bread winner of a family.Violent behaviour cannot be a solution for any problems.He was just a worker earns for his daily bread and the family purely depends on him.May be he was not knowing what was the contents of the news paper which he was carrying.Compensation is the best way to treat this poor worker.
Post a Comment