Saturday, February 16, 2013

கணவன் மனைவி சண்டை இரண்டு பிள்ளைகள் பரிதாபகரமாக மரணம் !

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இரண்டு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் புங்குடுதீவில் இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்திற்கு காரணமான கணவனும் மனைவியும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் உள்ள இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை இடம்பெற்றுள்ளது.

வழமை போல் சண்டையின் போது கிணற்றில் தனது 6 மாதக்குழந்தையும், மற்ற குழந்தையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் பாய்ந்துள்ளார்.
ஆயினும் இவர் அங்குள்ள பாறையென்றை பிடித்து தப்பியுள்ளார். குழந்தைகள் இரண்டு இறந்துள்ளன.

2 comments :

Anonymous ,  February 16, 2013 at 7:24 AM  

பரிதாபம்! ஏன் இப்படியான குடும்பப் பிரச்னை? அதற்காக ஏன் அப்பாவி குழந்தைகளை சாகடிக்க வேண்டும்? அவர்களுக்கு உதவிட புங்குடுதீவில் நல்ல மனிதர் ஒருவரும் இல்லையா?

Anonymous ,  February 17, 2013 at 10:51 AM  

புங்குடுதீவிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா அதிசயமேதான்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com