Monday, February 25, 2013

பரசூட் மூலம் தரையிரங்கும் போது இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றது போர்குற்றம்-ஹத்துருசிங்க

யாழ். வலி. வடக்கில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் எனவும் அதற்குள் ஒரு சில தனியார் காணிகள் உள்ளதாகவும் அவற்றின் உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழைம காலை பலாலியில் நடைபெற்ற இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு பின்னர் பத்திரிகையாலர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக 5 தடவைகளாக மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி உள்ளோம். இன்னும் குறைந்தலாவான மக்களே குடியேற்றபட வேண்டியுள்ளார்கள். அவர்களையும் விரைவில் குடியேற்றப்படவுள்ளனர் இது மட்டுமல்லாது பலாலி விமான நிலையத்துக்காக எடுக்கப்பட்ட காணிகளில் பெரும் பகுதி அரசாங்க காணிகளாக காணப்படுவதுடன் இந்த பிரதேசத்தில் ஒரு சில காணிகளே தனியாருடையது எனவே அத்தகைய தனியாருடைய காணிக்குரிய உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்கப்படும்.

அதேவேளை, 1987 ஆம் ஆண்டு மருத்துவ பீட மைதானத்திற்குள் பரசூட் மூலம் தரையிறங்கிய இந்திய இராணுவ வீரர்களை விடுதலைப்புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சுட்டு கொன்றது போர் குற்றம். ஏன் எனில் சர்வதேச போரியல் விதிகளின் படி வீரர்கள் பரசூட் மூலம் தரையிறங்கிய பின்னரே அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளலாம். ஆனால் புலிகள் அவர்கள் தரை இறங்க முதல் அந்தரத்தில் வைத்தே சுட்டு கொன்றுள்ளார்கள். இது சர்வதேச போரியல் விதிமுறைகளை தாண்டிய போர்க்குற்றம் ஆகும் என தெரிவித்தார்.

1 comments :

Arya ,  February 25, 2013 at 9:16 AM  

அது மட்டுமல்ல தம்மிடம் உயிருடன் பிடிபட்ட இந்திய இராணுவத்தினரையும் புலிகள் மக்கள் முன் சுட்டு கொன்றனர் இதுவும் போர் குற்றமாகும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com