முஸ்லிம் பெண்களும் ஹலாலாக வேண்டும்! - ஜம்இய்யத்துல் உலமா
முஸ்லிம்கள் உட்கொள்ளும் உணவு வகை மட்டுமன்றி திருமணஞ் செய்துகொள்ளும் பெண்களும் ஹலாலாக இருக்க வேண்டும் என்றும், ஹலால் என்பது இஸ்லாமிய அங்கீகாரம் பெற்றது என்ற பொருள்படும் என அகில இலங்கை முஸ்லிம் அறிஞர்களின் சபையின் ஹலால் பிரிவுக்குப் பொறுப்பான மௌலவி முர்ஷித் முலாக்கர் குறிப்பிடுகிறார்.
அகில இலங்கை அறிஞர்களின் சபை என்று குறிப்பிடக்கூடிய ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றபோதே மௌலவி முர்ஷித் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹலால் சான்றிதழ் வழங்கியவுடனேயே அது முஸ்லிம்களுக்கு மட்டும் என்றோ, பௌத்தர்களுக்குத் தடுக்கப்பட்டது என்றோ குறிப்பிடப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
உலமா சபையிலிருந்த ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதன் மூலம் ரூபா பதினைந்து இலட்சம் வருமானம் வருவதாகவும், அதிலிருந்து ஆண்டுதோறும் பதின்மூன்று இலட்சம் ரூபா செலவாவதாகவும் அவர் குறிப்பிட்டார். தங்களது சபையின் கணக்குகள் சிறப்பாக நடந்தேறுவதால் தேவைப்படுவோர் அதனை பரீட்சித்துப் பார்க்கவியலும் என்றும் அதன் பிரதி அரசாங்கத்துக்கும் வழங்கப்படுகிறது என்று மௌலவி குறிப்பிட்டார்.
ஹலால் சான்றிதழ் வழங்க்க்கூடிய உலகில் எந்தவொரு நாடும் எதிர்கொள்ளாத பிரச்சினையை இலங்கை எதிர்கொள்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிய சரியான தெளிவின்மையால் பிரச்சினைகள் மேலெழுவதாகவும், கேள்விகள் தலைதூக்குவதாகவும் இதனால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளை இது ஏற்படுத்தும் என்றும் மௌலவி முலாக்கர்மேலும்தெரிவித்தார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment