குருணாகலில் முஸ்லீம் வர்த்தகர்களுக்கு அச்சுறுத்தல்
குருணாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சாதர் தகவல் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
முஸ்லீம் வர்த்தகர்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கடைகளை மூட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் கொலை செய்ய நேரிடும் எனஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சதார் தெரிவித்துள்ளார்..
0 comments :
Post a Comment