ஓகஸ்ட மாதம் வடமாகாண சபைத் தேர்தல் ? தொடர் தேர்தல்களுக்கு அரசாங்கம் திட்டம்?
ஓகஸ்ட் மாதம் மேல் மற்றும் வட மாகாண சபைத்தேர்தல்களையும் 2014 ஆம் ஆண்டு ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க உயர் மட்டங்களிலிருந்து நம்பகத் தகுந்தவர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதற்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை மத்திய மற்றும் வடமேல் ஆகிய இரு மாகாண சபைகளுக்குமான பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடையவிருக்கின்ற நிலையிலேயே 7 மாதங்களுக்கு முன்னர் இரு மாகாண சபைகளையும் கலைத்து மே மாதம் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment