Friday, February 8, 2013

நடிகை குஷ்பு மீது தாக்குதல், விமான நிலையத்தில் செருப்பு வீச்சு, வீட்டிற்கும் கல்வீச்சு

தென்னிந்திய நடிகை குஷ்பு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, சென்னை திரும்பிய அவர் மீது விமான நிலையத்தில் வைத்து செருப்பு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் இல்லத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில் கலந்துகொண்ட போதே குஷ்பு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை, சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள குஷ்புவின் வீட்டின் மீதும் சுமார் 50 பேர் அடங்கிய குழுவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது குஷ்புவின் இரு மகள்களும் மாத்திரமே வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தி.மு.க.வின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியதற்கு எதிரான கருத்துக்களை ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை குஷ்பு. இந்த பேட்டி இன்று வெளியான நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

1 comments :

Anonymous ,  February 8, 2013 at 4:57 PM  

It's funny,you really don't know the meaning of real democracy .Public opinion is a vital part of democracy.
You threw slippers and burn scarecrows and shout for nothing.Before you do all these things try to respect everyone's point of view.First you comply and then you complain.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com