பிரித்தானிய வாகன தரிப்பிடமொன்றிலிருந்து ஏலும்புக்கூடுகள் மீட்பு. ரிச்சர்ட் மன்னரினது என ஊர்ஜிதம்.
பிரித்தானியாவில் வாகன தரிப்பிடமொன்றிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ரிச்சர்ட் மன்னனின் எலும்புக்கூடுகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்குள் மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்தே, இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, ஆராய்ச்சிக்குழுவின் பொறுப்பாளர் தெரிவிக்கின்றார். மூன்றாவது ரிச்சர்ட் மன்னன், 1485ம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தில் மரணமடைந்தார். எலும்புக்கூடுகள், லெஸ்டர், பிரதான வணக்கஸ்தலத்தில் புதைக்க, திட்டமிடப்பட்டுள்ளது.
இதேநேரம் ஐக்கிய அரசு இராச்சியத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில், இந்தியா, பங்களதேஷ் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 20 பேர் மரணமடைந்தனர்.
தொழிலாளர்களை அழைத்து சென்ற பஸ் வண்டி, லொறியுடன் மோதி, விபத்துக்குள்ளானது. லொறியின் சில்லில் ஏற்பட்ட கோளாறே, விபத்திற்கு காரணமென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.
0 comments :
Post a Comment