பேனாவில் வெடிகுண்டு,நவீன ஆயுதங்களுடன் இளைஞன் கைது
மாக்கர் வகை பேனாவில் பொருத்தப்பட்ட வெடிகுண்கள் மற்றும் பலவகையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விளைஞன் எம்பிலிப்பிட்டிய, பனாமுர வலகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவரிடமிருந்து மூடியை கழற்றும்போது வெடிக்கும் வகையில் மாக்கர் வகை பேனாவினால் தயாரிக்கப்பட்ட குண்டு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற கைக்குண்டுகள் இரண்டு, 12 ரவைகளை கொண்ட துப்பாக்கி, 100 கிராம் சீ-4 வகை வெடிப்பொருள் உள்ளிட்ட வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இளைஞனின் வீட்டிலிருந்தே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment