ஜம்மியத்துல் உலமாவின் கோரிக்கை நிராகரிப்பு, ஹலாலை ஒழிக்க தொடர்ந்தும் போராடுவோம்- பொதுபல சேனா
ஹலால் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் நேற்று விடுக்கப்பட்ட அறிவிப்பை ஏற்க முடியாது என்று தெவித்துள்ள பொதுபலசேனா அமைப்பு, பௌத்தர்களுக்கு ஹலால் சான்றிதழ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை எதிர்ப்பதாகவும் ஹலாலை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹலால் சான்றிதழ் விநியோகத்தை அராசங்கம் தம்மிடமிருந்து; பொறுபேற்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியல்துல் உலமா நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இக்கோரிக்கையை பொதுபல சேனா நிராகரித்துள்ளது. அத்தோடு தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தப்போவதாக பொதுபல சேனா எச்சரித்துள்ளது.
0 comments :
Post a Comment