அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரானின் ஆன்மிகத் தலைவர் மறுப்பு!!
ஈரானிய இஸ்லாமியக் குடியரசு எந்தவொரு அழுத்தத்தின் மத்தியிலும் அமெரிக்காவுடனான சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்வதற்கு விரும்பாது என ஈரானின் ஆன்மிகத் தலைவரான அலி கமனெய் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகப் படுத்தியும் அந்நாட்டைச் சேர்ந்த பலரின் பெயரை தனது வியாபாரத்துக்கான கறுப்புப்பட்டியலில் சேர்த்த நடவடிக்கையையும் அடுத்து கமெனெய்யின் இந்த ஆட்சேபணை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் ஈரானின் பிரதான பொருளாதார வளமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை மேற்குலக நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் போவதுடன் இதனால் ஈரான் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதும் அதன் எதிர்பார்ப்பாகும்.
அமெரிக்கப் பிரதி அதிபரான ஜோயே பிடென் வாஷிங்டன் நிர்வாகம் ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது என வெளிப்படையாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமெனெய் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அதே நேரம் ஏன அச்சுறுத்தல்களையும் விளைவிக்கின்றது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் தனது அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகள் அனைத்தும் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் தேவைகளுக்கானவையே எனக் கூறி வருகின்றது. இதன் காரணமாகவும் அமெரிக்காவின் வங்கித் தடைகளை தவிர்ப்பதற்காகவும் சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய்க் கொள்வனவு செய்வதை வெகுவாகக் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment