கட்டுநாயக்கா கடுகதி வீதி ஆகஸ்ற்றில்...
கொழும்பு - கட்டுநாயக்கா கடுகதி வீதி, ஆகஸ்ற் மாதம் மக்களுக்காக திறக்கப்படுமென கட்டுநாயக்கா கடுகதி வீதியின் செயற்றிட்ட பணிப்பாளர் புஷ்பா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடல் மணலை நிரப்பி,நிர்மாணிக்கப்படும் முதலாவது கடுகதி வீதி இதுவாகும். சுமார் 23 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கடுகதி வீதி, பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாகின்றது.
பேலியகொட, கெரவலபிட்டிய, ஜா-எல மற்றும் கட்டுநாயக்கா ஆகிய இடங்களில் நுழைவு வாயில்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா கடுகதி வீதியின் நிர்மாணப் பணிகள், சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதுடன், இதற்கென 45 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. சுற்றுலா, முதலீடு உள்ளிட்ட பல துறைகளின் அபிவிருத்திகளை இலக்காக கொண்டே அரசாங்கம் இந்த வீதியை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
0 comments :
Post a Comment