வடமராட்சி ஆசிரியை தூக்கில் தொங்கி மரணம்
கல்வியியற் கல்லூரியில் கற்கையை முடித்து அண்மையில் வடமராட்சி வட இந்து ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியையாக கடைமையாற்றிய திவாகர் திவ்யா (23 வயது) நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பருத்தித்துறை கலட்டியிலுள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிஉயிரிழந்துள்ளார்.
இவர் பாடசாலையை விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் இந்த நிலையில் வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது ஆசிரியை வீட்டின் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததை அடுத்து உடனடியாக அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்டு மந்திகை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார்.
இவரின் உயிரிழப்புக்கு காதல் பிரச்சனையே காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment