டெக்ஸ்ட்ரோ மிதோர்பன் கலந்த பாக்கிஸ்தான் தயாரிப்பு மருந்துப்பொருட்களுக்கு இலங்கையில் தடை வருகின்றது.
டெக்ஸ்ட்ரோ மிதோர்பன் எனும் இரசாயன பதார்த்தம் அடங்கிய சகல மருந்துப்பொருட்களையும் இடைநிறுத்துவதற்கு, தேசிய வாசனைப்பொருள் மற்றும் ஓளடத அதிகார சபை தெரிவித்துள்ளது. இருமலுக்கு பயன்படுத்தும் சிரப் வகைகளில் இந்த இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் குஜரன்வாலா ஆகிய பகுதிகளில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பெரும் எண்ணிக்கையிலானோர் பல்வேறு உபாதைக்கு உட்பட சம்பவத்தை அடுத்து உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட எச்சரிக்கையை தொடர்ந்து, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் சிரப் வகைகளுக்கான செயற்பாட்டு மூலப்பொருளாக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ரோ மிதோர்பன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து, இரசாயன பதார்த்தங்களுடாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் லியோ மெதபன் எனும் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
ஏனைய நாடுகளில் உள்ள மருந்துப்பொருட்களுக்கு இந்தியாவின் மூலப் பொருட்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக டெக்ஸ்ரோ மெதபன் எனும் பதார்த்தத்தின் தரம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துமாறும், உலக சுகாதார ஸ்தபானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, இந்த மூலப் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, இத்தீர்மானம் நடைமுறையில் இருக்குமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment