கிழக்கு பல்கலைக்கழக புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்-படங்கள் இணைப்பு
சுதந்திரதின நிகழ்வினைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞானபீடத்தின் விலங்கியல்துறை கட்டிடத் தொகுதியையும் நல்லையா மண்டபத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்துள்ளார்.விசேட ஹெலிகொப்டரில் கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஜனாதிபதியை உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வந்திறங்கினார்கள்.
இவர்களை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், விலங்கியல் ஆய்வுகூடத்தையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment